அறிவினான் ஆகுவது உண்டோ – குறள்: 315

அறிவினான் ஆகுவது உண்டோ

அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின்நோய்
தம்நோய்போல் போற்றாக் கடை.
– குறள்: 315

– அதிகாரம்: இன்னா செய்யாமை, பால்: அறம்



கலைஞர் உரை

பிற உயிர்களுக்கு வரும் துன்பத்தைத் தம் துன்பம் போலக் கருதிக் காப்பாற்ற முனையாதவர்களுக்கு அறிவு இருந்தும் அதனால் எந்தப் பயனுமில்லை.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

பிறிதோர் உயிர்க்கு வந்த துன்பங்களைத் தமக்கு வந்தன போலக் கருதிக் காவா விடத்து; உயிர்களின் இயல்பைப் பற்றி அறிந்த அறிவினால் ஏதேனும் ஒரு பயனுண்டோ? இல்லை என்றவாறு.



மு. வரதராசனார் உரை

மற்ற உயிரின் துன்பத்தைத் தன் துன்பம்போல் கருதிக் காப்பாற்றாவிட்டால், பெற்றுள்ள அறிவினால் ஆகும் பயன் உண்டோ?



G.U. Pope’s Translation

From wisdom’s vaunted lore what doth the learner gain, If as his own he guard not others’ souls from pain?

 – Thirukkural: 315, Not doing Evil, Virtues



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.