அரங்குஇன்றி வட்டுஆடி யற்றே – குறள்: 401

Thiruvalluvar

அரங்குஇன்றி வட்டுஆடி யற்றே நிரம்பிய
நூல்இன்றிக் கோட்டி கொளல். – குறள்: 401

அதிகாரம்: கல்லாமை, பால்: பொருள்



கலைஞர் உரை

நிறைந்த அறிவாற்றல் இல்லாமல் அவையில் பேசுவது ஆடுவதற்கான கட்டம் போட்டுக் கொள்ளாமலே சொக்கட்டான் விளையாடுவதைப் போன்றதாகும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

அறிவு நிரம்புவதற் கேதுவான நூல்களைக் கல்லாது ஒருவன் (அவையின் கண்) சொற்பொழிவாற்றத் தலைப்படுதல்; அறைகள் வகுக்காமலே வட்டாட்டம் ஆடுவதை யொக்கும்.



மு. வரதராசனார் உரை

அறிவு நிரம்புவதற்குக் காரணமான நூல்களைக் கற்காமல் கற்றவரிடம் சென்று பேசுதல், சூதாடும் அரங்கு இழைக்காமல் வட்டுக்காயை உருட்டி ஆடினாற் போன்றது.



G.U. Pope’s Translation

Like those at draughts would play without the chequered square, Men void of ample lore counsels of the learned share.

 – Thirukkural: 401, Ignorance, Wealth



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.