ஒருமைக்கண் தான்கற்ற கல்வி – குறள்: 398

Thiruvalluvar

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்பு உடைத்து. – குறள்: 398

– அதிகாரம்: கல்வி, பால்: பொருள்கலைஞர் உரை

ஒரு தலைமுறையில் பெறும் கல்வி அறிவனாது, ஏழேழு
தலைமுறைக்கும் பாதுகாப்பாக அமையும்.ஞா. தேவநேயப் பாவாணர் உரை

ஒருவனுக்கு தான் ஒரு பிறப்பிற் கற்ற கல்வி; எழுபிறப்பளவுந் தொடர்ந்து அரணாகநின்று உதவுந் தன்மையயுடையது.மு. வரதராசனார் உரை

ஒரு பிறப்பில் தான் கற்ற கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டும் அல்லாமல் ஒருவனுக்கு எழுபிறப்பிலும் உதவும் தன்மையுடையதாகும்.G.U. Pope’s Translation

The man who store of learning gains,
In one, through seven worlds, bliss, attains.

Thirukkural: 398, Learning, Wealth

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.