அன்றுஅறிவாம் என்னாது அறம்செய்க – குறள்: 36

அன்றுஅறிவாம் என்னாது அறம்செய்க

அன்றுஅறிவாம் என்னாது அறம்செய்க மற்றுஅது
பொன்றுங்கால் பொன்றாத் துணை.
– குறள்: 36

– அதிகாரம்: அறன் வலியுறுத்தல், பால்: அறம்



கலைஞர் உரை

பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று நாள் கடத்தாமல் அறவழியை மேற்கொண்டால் அது ஒருவர் இறந்தபின் கூட அழியாப் புகழாய் நிலைத்துத் துணை நிற்கும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

யாம் இன்று இளைமையாயிருப்பதாற் பிந்தி முதுமையிற் செய்வே மென்று கடத்திவையாது இன்றிருந்தே அறவினையைச் செய்து வருக; பின்பு அவ்வறம் இறக்குங் காலத்து இறவாத் துணையாம்.



மு. வரதராசனார் உரை

இளைஞராக உள்ளவர் பிற்காலத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணாமல் அறம் செய்யவேண்டும். அதுவே உடல் அழியும் காலத்தில் அழியாத் துணையாகும்.



G.U. Pope’s Translation

Do deeds of virtue now, Say not, ‘To-morrow we’ll be wise’;
Thus, when thou diest, shalt thou find a help that never dies.

 – Thirukkural: 36, Assertion of the strength of virtue, Virtues



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.