அன்பின் விழையார் பொருள்விழையும் – குறள்: 911

Thiruvalluvar

அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்
இன்சொல் இழுக்குத் தரும்.
குறள்: 911

– அதிகாரம்: வரைவின் மகளிர், பால்: பொருள்.கலைஞர் உரை

அன்பே இல்லாமல் பொருள் திரட்டுவதையே குறிக்கோளாகக் கொண்ட பொதுமகளிர் இனிமையாகப் பேசுவதை நம்பி ஏமாறுகிறவர்களுக்கு இறுதியில் துன்பமே வந்து சேரும்.ஞா. தேவநேயப் பாவாணர் உரை

ஒருவனை அன்புபற்றி விரும்பாமற் பொருள் பற்றி விரும்பும் அழகிய வளையலணிந்த விலைமகளிர்; தாம் கருதிய பொருள் பெறுமட்டும் தாம் அன்பு கனிந்தவராகக் கூறும் இனிய சொல்; அன்று இன்பந்தருவதுபோல் தோன்றினும் பின்பு துன்பத்தையே விளைவிக்கும்.மு. வரதராசனார் உரை

அன்பினால் விரும்பாமல் பொருள் காரணமாக விரும்புகின்ற பொதுமகளிர் பேசுகின்ற இனிய சொல் ஒருவனுக்குத் துன்பத்தைக் கொடுக்கும்.G.U. Pope’s Translation

Those that choice armlets wear, who seek not thee with love, But seek thy wealth, their pleasant words will ruin prove.

Thirukkural: 911, Wanton Women, Wealth.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.