பொருள்தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் – குறள்: 199

Thiruvalluvar

பொருள்தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் மருள்தீர்ந்த
மாசுஅறு காட்சி யவர். – குறள்: 199

– அதிகாரம்: பயனில சொல்லாமை, பால்: அறம்கலைஞர் உரை

மயக்கம் சிறிதுமில்லாத மாசற்ற அறிவுடையவர் மறந்தும்கூடப் பயனற்ற சொற்களைச் சொல்ல மாட்டார்.ஞா. தேவநேயப் பாவாணர் உரை

மயக்கத்தினின்று நீங்கிய குற்ற மற்ற அறிவுடையார்; பயனில்லாத சொற்களை மறந்துஞ் சொல்லார்.மு. வரதராசனார் உரை

மயக்கத்திலிருந்து தெளிந்த மாசற்ற அறிவை உடையவர், பயன் நீங்கிய சொற்களை ஒருகால் மறந்தும் சொல்லமாட்டார்.G.U. Pope’s Translation

The men of vision pure, from wildering folly free,
Not e’en in thoughtless hour, speak words of vanity.

 – Thirukkural: 199, Not Speaking Profitless Words, VirtuesBe the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.