முதல்இலார்க்கு ஊதியம் இல்லை – குறள்: 449

Thiruvalluvar

முதல்இலார்க்கு ஊதியம் இல்லை மதலைஆம்
சார்புஇலார்க்கு இல்லை நிலை.
– குறள்: 449

அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல், பால்: பொருள்



கலைஞர் உரை

கட்டடத்தைத் தாங்கும் தூண் போலத் தம்மைத் தாங்கி நிற்கக் கூடிய துணையில்லாதவர்களின் நிலை, முதலீடு செய்யாத வாணிபத்தில் வருவாய் இல்லாத நிலையைப் போன்றதேயாகும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

முதற்பொருளில்லாத வணிகர்க்கு அதனால் வரும் ஊதியமும் (இலாபமும்) இல்லை; அது போல, தம்மொடு சேர்ந்து தம்அரசை, முட்டுக்கொடுத்துத் தாங்கும் துணையில்லாத அரசர்க்கு அதனால் ஏற்படும் நிலைபேறும் இல்லை.



மு. வரதராசனார் உரை

முதல் இல்லாத வணிகர்க்கு அதனால் வரும் ஊதியம் இல்லை; அது போல் தம்மைத் தாங்கிக் காப்பாற்றும் துணை இல்லாதவர்க்கு நிலைபேறு இல்லை.



G.U. Pope’s Translation

Who owns no principal, can have no gain of usury; Who lacks support of friends, knows no stability.

 – Thirukkural: 449, Seeking the Aid of Great Men, Wealth



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.