அமைந்துஆங்கு ஒழுகான் அளவுஅறியான் – குறள்: 474

Thiruvalluvar

அமைந்துஆங்கு ஒழுகான் அளவுஅறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும்.
குறள்: 474

அதிகாரம்: வலி அறிதல், பால்: பொருள்கலைஞர் உரை

மற்றவர்களை மதிக்காமலும், தன் வலிமையை உணர்ந்து கொள்ளாமலும், தன்னைத் தானே பெரிதாக விளம்பரப் படுத்திக் கொண்டிருப்பவர்கள் விரைவில் கெட்டுத் தொலைவார்கள்.ஞா. தேவநேயப் பாவாணர் உரை

வேற்றரசரோடு பொருந்தி அதற்கேற்ப நடந்துகொள்ளாமலும் ; தன் வலியளவை அறியாமலும் ; தன்னை உயர்வாக மதித்து அவரொடு பகைகொண்ட வரசன் ; விரைந்து கெடுவான் .மு. வரதராசனார் உரை

மற்றவர்களோடு ஒத்து நடக்காமல். தன் வலிமையின் அளவையும் அறியாமல், தன்னை வியந்து மதித்துக் கொண்டிருப்பவன் விரைவில் கெடுவான்.G.U. Pope’s Translation

Who not agrees with those around, no moderation knows, In self-applause indulging, swift to ruin goes.

 – Thirukkural: 474,The Knowledge of Power, WealthBe the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.