அடல்தகையும் ஆற்றலும் இல்எனினும் – குறள்: 768

Thiruvalluvar

அடல்தகையும் ஆற்றலும் இல்எனினும் தானை
படைத்தகையான் பாடு பெறும்.
– குறள்: 768

– அதிகாரம்: படைமாட்சி, பால்: பொருள்



கலைஞர் உரை

போர் புரியும் வீரம், எதிர்த்து நிற்கும் வல்லமை ஆகிய இரண்டையும்
விட ஒரு படையின் அணிவகுப்புத் தோற்றம் சிறப்புடையதாக அமைய வேண்டும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

படை; பகைவர்மேற் சென்று கொல்லும் மறத்திறமும் அவர் தன்னை வந்து தாக்கினால் தாங்கும் வலிமையும் தனக்கில்லாவிடினும்; தன் தோற்றப்பொலிவாலும் வடிவு வகுப்புச் சிறப்பாலும் பெருமை பெறும்.



மு. வரதராசனார் உரை

போர் செய்யும் வீரமும் (எதிர்ப்பைத் தாங்கும்) ஆற்றலும் இல்லையானாலும் படை தன்னுடைய அணி வகுப்பால் பெருமை பெறும்.



G.U. Pope’s Translation

Though not in war offensive or defensive skilled;
An army gains applause when well equipped and drilled.

 – Thirukkural: 768, The Excellence of an Army, Wealth



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.