மறம்மானம் மாண்ட வழிச்செலவு – குறள்: 766

Thiruvalluvar

மறம்மானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்
எனநான்கே ஏமம் படைக்கு.
– குறள்: 766

– அதிகாரம்: படைமாட்சி, பால்: பொருள்



கலைஞர் உரை

வீரம், மான உணர்வு, முன்னோர் சென்ற வழி நடத்தல், தலைவனின்
நம்பிக்கையைப் பெறுதல் ஆகிய நான்கும் படையைப் பாதுகாக்கும்
பண்புகளாகும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

தறுகண்மை, தன்மானம், பண்டை வயவர் (வீரர்) ஒழுகிய நல்வழியில் ஒழுகுதல், அரசனால் நம்பப்படுதல் ஆகிய நான்கே; படைக்கு அரணான பண்புகளாம்.



மு. வரதராசனார் உரை

வீரம், மானம், சிறந்த வழியில்நடக்கும் நடக்கை, தலைவரால் நம்பித் தெளியப்படுதல் ஆகிய நான்கு பண்புகளும் படைக்குச் சிறந்தவையாகும்.



G.U. Pope’s Translation

Valour with honour, sure advance in glory’s path with confidence;
To warlike host these four are sure defence.

 – Thirukkural: 766, The Excellence of an Army, Wealth



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.