இகழ்ந்துஎள்ளாது ஈவாரைக் காணின் – குறள்: 1057

Thiruvalluvar

இகழ்ந்துஎள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துஉள்ளம்
உள்ளுள் உவப்பது உடைத்து. – குறள்: 1057

– அதிகாரம்: இரவு, பால்: பொருள்



கலைஞர் உரை

இழித்துப் பேசாமலும், ஏளனம் புரியாமலும் வழங்கிடும் வள்ளல்
தன்மை உடையவர்களைக் காணும்போது, இரப்போர் உள்ளம் மகிழ்ச்சியால் இன்பமுறும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

தம்மையவமதித்துப் பேசாதும் இழிவாகக் கருதாதும் விரும்பிய பொருளைக் கொடுப்பாரைக் கண்டால்; தன்மானமுள்ள இரப்போரின் உள்ளம் மகிழ்ச்சியாற் பொங்கி மேன்மேலும் உள்ளுற இன்புறுந் தன்மையதாம்.



மு. வரதராசனார் உரை

இகழ்ந்து எள்ளாமல் பொருள் கொடுப்பவரைக் கண்டால், இரப்பவரின் உள்ளம் மகிழ்ந்து உள்ளுக்குள்ளேயே உவகை அடையும் தன்மையுடையதாகும்.



G.U. Pope’s Translation

If men are found who give and no harsh words of scorn employ, The minds of askers, through and through, will thrill with joy.

 – Thirukkural: 1057, Mendicancy, Wealth



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.