இன்மையுள் இன்மை விருந்துஒரால் – குறள்: 153

Thiruvalluvar

இன்மையுள் இன்மை விருந்துஒரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை. – குறள்: 153

– அதிகாரம்: பொறை உடைமை, பால்: அறம்கலைஞர் உரை

வறுமையிலும் கொடிய வறுமை; வந்த விருந்தினரை வரவேற்க
முடியாதது. அதைப்போல வலிமையிலேயே பெரிய வலிமை அறிவிலிகளின் செயலைப் பொறுத்துக் கொள்வது.ஞா. தேவநேயப் பாவாணர் உரை

ஒருவனுக்கு வறுமையுள் வறுமையாவது விருந்தினரை ஏற்றுக் கொள்ளாது விடுதல் ; அதுபோல வலிமையுள் வலிமையாவது அறிவிலார் செய்த மிகையைப் பொறுத்துக் கொள்ளுதல்.மு. வரதராசனார் உரை

வறுமையுள் வறுமை, விருந்தினரைப் போற்றாமல் நீக்குதல்; வல்லமையுள் வல்லமை என்பது அறிவிலார் தீங்கு செய்தலைப் பொறுத்தலாகும்.G.U. Pope’s Translation

The sorest poverty is bidding guest unfed depart;
The mightiest might to bear with men of foolish heart.

 – Thirukkural: 153, The Possession of Patience, Forbearance, Virtues

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.