புறத்துஉறுப்பு எல்லாம் எவன்செய்யும் – குறள்: 79

Thiruvalluvar

புறத்துஉறுப்பு எல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துஉறுப்பு அன்பு இலவர்க்கு.
– குறள்: 79

– அதிகாரம்: அன்புடைமை, பால்: அறம்கலைஞர் உரை

அன்பு எனும் அகத்து உறுப்பு இல்லாதவர்க்குப் புறத்து உறுப்புகள்
அழகாக இருந்து என்ன பயன்?ஞா. தேவநேயப் பாவாணர் உரை

இல்லறம் நடத்துவாரின் உடம்புள் நின்று இல்லறத்திற்கு உறுப்பாகிய அன்பு இல்லாதவர்க்கு; மற்றப் புறத்து நின்று உறுப்பாவன வெல்லாம் அவ்வறஞ் செய்தற்கண் என்ன உதவியைச் செய்யும்?மு. வரதராசனார் உரை

உடம்பின் அகத்து உறுப்பாகிய அன்பு இல்லாதவர்க்கு உடம்பின் புறத்து உறுப்புக்கள் எல்லாம் என்ன பயன் செய்யும்?G.U. Pope’s Translation

Though every outward part complete, the body’s fitly framed; What good, when soul within, of love devoid, lies halt and maimed?

 – Thirukkural: 79, The Possession of Love, Virtues

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.