TIFR – அடிப்படை அறிவியல் ஆராய்ச்சிக்கான PhD சேர்க்கைகள் – PHD Admissions 2019 – TIFR – Tata Institute of Fundamental Research

Atom

அடிப்படை அறிவியல் ஆராய்ச்சியில் (Fundamental Science Research) ஆர்வம் உள்ளவரா நீங்கள்? இந்திய அரசின் ஆராய்ச்சி நிறுவனமான டாடா இன்ஸ்டிடுயூட் ஆஃப் ஃபண்டமெண்டல் ரிசெர்ச் (Tata Institute of Fundamental Research – TIFR – டி.ஐ.ஃப்.ஆர்) – ல் ஆராய்ச்சிப் படிப்புக்கான (PhD) சேர்க்கைகள் இணைய வழியில் நடைபெறுகிறது. இந்நிறுவனம், இயற்பியல் (Physics), வேதியியல் (Chemistry), உயிரியல் (Biology), கணிதம் (Mathematics), கணிப்பொறி அறிவியல் (Computer Science) மற்றும் அறிவியல் கல்வி (Science Education) ஆகிய துறைகளில் அடிப்படை ஆராய்ச்சி செய்கிறது. இதன் தலைமையகம் மும்பையில் உள்ளது. மற்ற கிளை நிறுவனங்கள் புனே, பெங்களூரு, ஹைதரபாத் ஆகிய நகரங்களில் உள்ளன.

கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியியல், அல்லது பொறியியல் போன்ற துறைகளில்    M.A. / M.Sc. / M.E. / M.Tech.,  / B.A. / B.Sc. / B.S. / B.E. / B.Tech. / B.Sc.போன்ற பட்டப் படிப்பை நீங்கள் முடித்து இருந்தால் TIFR-ல் PhD அல்லது Integrated PhD  படிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. இந்த நிறுவனத்தில் ஆராய்ச்சி மேற்கொள்ள விரும்புவோர், இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

PhD மாணவர்கள் முதலில் மாதம் தோறும் ரூபாய் 25000 உதவித்தொகை (Fellowship) பெறுவர். இந்த உதவித்தொகை PhD பதிவுக்குப் பின் மாதம் தோறும் ரூபாய் 28000 ஆக உயர்த்தப் படும்.

இதேபோல், Integrated PhD மாணவர்கள் முதல் ஆண்டில், மாதம் தோறும் ரூபாய் 16000  உதவித்தொகை  (Fellowship) பெறுவர். பிறகு, அவர்களுடைய செயல்திறன் மனநிறைவு (Upon Satisfactory Performance) அளிப்பதாக இருந்தால்,  உதவித்தொகை ரூபாய் 25000 ஆகவும், பின்னர் ரூபாய் 28000  ஆகவும் உயர்த்தப்படும்.

PhD சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் நவம்பர்-15-2018 ஆம் தேதிக்குள் இணைய வழியில் விண்ணப்பிக்கப் பட வேண்டும். அதற்கான விவரங்கள் மற்றும் முகவரிகள்:

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.