ஐ.ஐ.டி பாம்பே முதுநிலைப் பட்டப் படிப்புகள் – IIT Bombay – IITB PG Admissions 2019

IITB PG Admissions 2019

எம்.டெக். (MTech), எம்.டெக்.-பிஎச்.டி (MTech-PhD / Dual Degree), எம்.எஸ்சி-பிஎச்.டி (MSc-PhD / Dual Degree), மற்றும் பிற முதுநிலைப் பட்டப் படிப்பிற்கான சேர்க்கைகள்

இந்திய தொழில்நுட்பக் கழகம், பாம்பே (இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, பாம்பே IIT Bombay), முதுநிலைப் பொறியியல், அறிவியல் மற்றும் ஆராய்ச்சிப் படிப்பிற்கான சேர்க்கைக்கான (IITB PG Admissions 2019) விண்ணப்பங்களை வரவேற்கிறது. இது ஜூலை 2019-ல் தொடங்கவிருக்கும் கல்வியாண்டிற்கான முதுநிலைப் பட்டப்படிப்பிற்கான சேர்க்கை.

ஐ.ஐ.டி, பாம்பே நிர்ணயித்துள்ளபடி. கல்வித்தகுதியுடைய மாணவர்கள், பின்வரும் முதுநிலைப் பட்டப்படிப்புகளில் சேரலாம்:

  • அனைத்து துறைகள் / பிரிவுகளுக்கான எம்.டெக். (MTech)
  • குறிப்பிட்ட பிரிவுகளில் எம்.டெக். + பிஎச்.டி (இரட்டைப் பட்டம்) – MTech + PhD (Dual Degree)
  • எம்.ஃபில் (திட்டம் மற்றும் வளர்ச்சி) – MPhil (Planning and Development)
  • ஆற்றல் பிரிவில் எம்.எஸ்சி + பிஎச்.டி (இரட்டைப் பட்டம்) – MSc – PhD (Dual Degree) in Energy
  • முதுநிலைப் பொதுக் கொள்கை – Master in Public Policy (MPP)
  • முதுநிலை நகர வடிவமைப்பு மற்றும் பொறியியல் – Master in Urban Design and Engineering (MUDE)

விண்ணப்பிக்க இறுதி தேதி

பின்வரும் பட்டப் படிப்புக்கான விண்ணப்பங்களை இணைய வழியில் பதிவு செய்ய இறுதி நாட்கள்:

  • MTech and MTech + PhD (Dual Degree): April-16-2019
  • MSc + PhD (Dual Degree) in Energy: April-15-2019
  • MPhil: May-06-2019

பின்வரும் பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பங்களை அஞ்சல் வழியில் பதிவு செய்ய இறுதி நாட்கள்:

  • Master in Public Policy (MPP): May-17-2019
  • Master in Urban Design and Engineering (MUDE): April-30-2019

மேலும் கல்வித்தகுதி, கல்வி உதவித் தொகை, விண்ணப்பிக்க வழிமுறைகள் போன்ற விவரங்களை அறிய IIT பாம்பே-யின் அதிகாரப்பூர்வ இணைய முகவரியைப் பார்க்கவும்:

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.