நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய
வாயினர் ஆதல் அரிது. – குறள்: 419
– அதிகாரம்: கேள்வி, பால்: பொருள்
விளக்கம்:
தெளிவான கேள்வியறிவு இல்லாதவர்கள், அடக்கமாகப் பேசும் அமைதியான பண்புடையவர்களாக இருக்க இயலாது.
உயர்வுஅகலம் திண்மை அருமைஇந் நான்கின்அமைவுஅரண் என்றுஉரைக்கும் நூல். – குறள்: 743 – அதிகாரம்: அரண், பால்: பொருள் கலைஞர் உரை உயரம், அகலம், உறுதி, பகைவரால் அழிக்க இயலாத அமைப்பு ஆகிய நான்கும் அமைந்திருப்பதே அரணுக்குரிய இலக்கணமாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை உயர்ச்சியும் அகலமும் திணுக்கமும் [ மேலும் படிக்க …]
வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்பண்புஇலன் பற்றார்க்கு இனிது. – குறள்: 865 – அதிகாரம்: பகை மாட்சி, பால்: பொருள். கலைஞர் உரை நல்வழி நாடாமல், பொருத்தமானதைச் செய்யாமல், பழிக்கு அஞ்சாமல், பண்பும் இல்லாமல் ஒருவன் இருந்தால் அவன் பகைவரால் எளிதில் வெல்லப்படுவான். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]
நுனிக்கொம்பர் ஏறினார் அஃது இறந்து ஊக்கின்உயிர்க்குஇறுதி ஆகி விடும். – குறள்: 476 – அதிகாரம்: வலி அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை தன்னைப் பற்றி அதிகமாகக் கணக்குப் போட்டுக் கொண்டு, எல்லை மீறிப் போகிற ஒருவர், நுனிக் கிளையில் ஏறியவர் அதற்கு மேலும் ஏறிட முயற்சி [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark


Be the first to comment