இகல்எதிர் சாய்ந்துஒழுக வல்லாரை – குறள்: 855

Thiruvalluvar

இகல்எதிர் சாய்ந்துஒழுக வல்லாரை யாரே
மிகல்ஊக்கும் தன்மை யவர்.
– குறள்: 855

– அதிகாரம்: இகல், பால்: பொருள்கலைஞர் உரை

மனத்தில் மாறுபாடான எண்ணம் உருவானால் அதற்கு இடம் தராமல் நடக்கக்கூடிய ஆற்றலுடையவர்களை வெல்லக்கூடியவர்கள் யாருமில்லை.ஞா. தேவநேயப் பாவாணர் உரை

தன் உள்ளத்தில் தோன்றும் மாறுபாட்டை ஏற்றுக்கொள்ளாது அதன் எதிரே வெள்ளத்து நாணல்போற் சாய்ந்தொழுக வல்லாரை; வெல்ல முனையுந்தன்மையுடையார் யார்தான்?மு. வரதராசனார் உரை

இகல் என்று சொல்லப்படும் துன்பங்களில் கொடிய துன்பம் கெட்டுவிட்டால். அஃது ஒருவனுக்கு இன்பங்களில் சிறந்த இன்பத்தைக் கொடுக்கும்.G.U. Pope’s Translation

If men from enmity can keep their spirits free,
Who over them shall gain the victory?

Thirukkural: 855, Hostility, Wealth.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.