பழுதுஎண்ணும் மந்திரியின் பக்கத்துள் – குறள்: 639

Thiruvalluvar

பழுதுஎண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ்ஓர்
எழுபது கோடி உறும்.
– குறள்: 639

– அதிகாரம்: அமைச்சு, பால்: பொருள்கலைஞர் உரை

தவறான வழிமுறைகளையே சிந்தித்துச் செயல்படுகிற அமைச்சர் ஒருவர் அருகிலிருப்பதை விட எழுபது கோடி எதிரிகள் பக்கத்தில் இருப்பது எவ்வளவோ மேலாகும்.ஞா. தேவநேயப் பாவாணர் உரை

நன்மை செய்கிறவன்போல் அருகிலிருந்து கொண்டு தீமையை எண்ணும் அமைச்சன் ஒருவனில்; அரசனுக்குப் பக்கமாகவே எழுபது கோடிப் பகைவர் அமைவர்.மு. வரதராசனார் உரை

தவறான வழியை எண்ணிக் கூறுகின்ற அமைச்சனை விட எழுபது கோடி பகைவர் பக்கத்தில் இருந்தாலும் நன்மையாகும்.G.U. Pope’s Translation

A minister who by king’s side plots evil things Worse woes than countless foemen brings.

 – Thirukkural: 639, The Officeof Minister of State, WealthBe the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.