காக்க பொருளா அடக்கத்தை – குறள்: 122

காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனின்ஊங்கு இல்லை உயிர்க்கு. – குறள்: 122

-அதிகாரம்: அடக்கம் உடைமை; பால்: அறம்

கலைஞர் உரை

மிக்க உறுதியுடன் காக்கப்படவேண்டியது அடக்கமாகும். அடக்கத்தைவிட
ஆக்கம் தரக் கூடியது வேறொன்றும் இல்லை.

தேவநேயப் பாவாணர் உரை

அடக்கமுடைமையை ஒரு செல்வமாகப் பேணிக் காக்க; மக்களுக்கு அதனினும் சிறந்து ஆக்கம் தருவது வேறொன்றுமில்லை.

மு. வரதராசனார் உரை

அடக்கத்தை உறுதிப் பொருளாகக் கொண்டு போற்றிக்காக்க வேண்டும். அந்த அடக்கத்தைவிட மேம்பட்ட ஆக்கம் உயிர்க்கு இல்லை.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.