90 வயதே ஆன உலகின் மிக சுறுசுறுப்பான இளைஞர்! – 90 Year Old World’s Most Active Grandpa!

90 வயதே ஆன உலகின் மிக சுறுசுறுப்பான இளைஞர்! (90 Year Old World’s Most Active Grandpa!)

கனடா நாட்டின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் வாழும் 90 வயதான ஜான் கார்ட்டெர் உலகிலேயே மிகவும் சுறுசுறுப்பான, துடிப்பு மிக்க தாத்தா என்றால் அது மிகையாகாது! இரண்டு ஆண்டுகளுக்கு முன் இவரது மனைவி இறந்துவிட்டார். அவரது மனைவியின் பிரிவு இவரை வருத்தினாலும், அத்துன்பத்தால் இவர் துவண்டு மனம் தளரவில்லை. பெரும்பாலும் அதிகாலை 5 மணிக்கு கண் விழிக்கும் இவர், சீரான மித ஓட்டம் (Jogging), மிதிவண்டி ஓட்டம், தளப்பந்து (Baseball), கால்பந்து, மீன் பிடித்தல், நீச்சல் குளத்தில் 10 அடி உயரப் பலகையிலிருந்து குட்டிக்கரணம், உடற்பயிற்சி, என்று நாள் முழுவதும் பம்பரம் போல் சுழன்று கொண்டே இருக்கிறார். இவரது வயதுடைய பிறரால் செய்ய முடியாததை இவர் சாதித்துக் காட்டியுள்ளார். இவ்வளவு ஏன்? இளைஞர்கள் பலராலும் முடியாத செயல்களை இவரால் சாதிக்க முடிகிறது. நம்ப முடியவில்லையா? கீழ்க்கண்ட இந்த காணொளிக்காட்சியைச் சொடுக்கிப் பாருங்கள்!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.