நாசா மற்றும் ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனங்களின் விண்வெளிப்பயணம் (NASA SpaceX Demo-2 Test Flight to Space)

நாசா ஸ்பேஸ்-எக்ஸ்

நாசா மற்றும் ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனங்களின் விண்வெளிப்பயணம் (NASA SpaceX Demo-2 Test Flight to Space)

நாசா மற்றும் ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனங்கள் பன்னாட்டு விண்வெளி நிலையத்திற்கு விண்வெளி வீரர்களை 30-மே-2020 அன்று, அமெரிக்காவின் கிழக்கு மண்டல நேரப்படி பிற்பகல் 3.22 மணிக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளன. அதாவது இந்திய நேரப்படி 31-மே-2020, நள்ளிரவு 12.52 மணிக்கு.

அமெரிக்காவின் நாசா, ஃப்ளோரிடாவில் உள்ள அதன் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன் 9 எனும் ஏவுகணையை விண்ணில் செலுத்தவிருக்கிறது.

ஸ்பேஸ்-எக்ஸ் சோதனைப்பயணம் (SpaceX Demo-2 Test Flight)

ஸ்பேஸ்-எக்ஸ் என்ற தனியார் நிறுவனம் தயாரித்துள்ள ஃபால்கன் 9 (Falcon 9) எனப்படும் ஏவுகணையின் மூலம் அந்நிறுவனத்தின் ட்ராகன் (Dragon) எனும் விண்கலத்தை பூமியின் சுற்றுவட்டப் பாதையில் செலுத்தும்.

பின், அந்த விண்கலம் (ட்ராகன்) விண்வெளியில் சுற்றிக்கொண்டிருக்கும், பன்னாட்டு விண்வெளி நிலையத்தை அடைந்து, அதனுடன் இணைந்தவுடன், அதில் இருக்கும் அமெரிக்க விண்வெளி வீரர்கள் விண் பாப் பென்கென் (Bob Behnkan) மற்றும் டக் ஹர்லி (Doug Hurley) வெளி நிலையத்திற்குள் செல்வார்கள்.

ட்ராகன் விண்கலமானது, குறிப்பிட்ட நாட்களுக்குப் பின் விண்வெளி வீரர்களின் பணி முடிந்தவுடன், பூமியின் சுற்றுவட்டப் பாதையில் சுற்றிக்கொண்டிருக்கும் விண்வெளி நிலையத்திலிருந்து பிரிந்து, அவர்களைச் சுமந்துகொண்டு பூமியை வந்தடையும்.

2011-ஆம் ஆண்டிற்கு பிறகு, முதன்முறையாக அமெரிக்க விண்வெளிவீரர்கள் அமெரிக்க மண்ணிலிருந்து, அமெரிக்க ஏவுகணை மற்றும் விண்கலங்களில் செல்ல இருக்கிறார்கள். இடைப்பட்ட ஆண்டுகளில் அமெரிக்க வீரர்கள் ரஷ்யா சென்று, ரஷ்யாவின் சாயுஸ் (Soyuz) விண்கலம் மூலமே விண்வெளி நிலையத்திற்குச் சென்று வந்தனர். இது அமெரிக்காவின் வணிகரீதியான முதல் சோதனைப்பயணம் (SpaceX Demo-2 test flight).

நாசா மற்றும் ஸ்பேஸ்-எக்ஸ் செலுத்தும் ஃபால்கன் விண்ணில் செலுத்தப்படுவதிலிருந்து, ட்ராகன் விண்வெளி நிலையத்தை அடைந்து, வீரர்கள், ஏற்கனவே நிலையத்திலிருக்கும் பிற வீரர்களால் வரவேற்கப்படுவது வரை அனைத்து நிகழ்வுகளையும் பின்வரும் இணையதளங்களில் நேரடியாகக் காணலாம். வானிலை உகந்ததாக இருப்பின் திட்டமிட்ட நேரப்படி ஏவுகணை விண்ணில் செலுத்தப்படும்.

https://www.nasa.gov/nasalive

(அல்லது)

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.