விண்வெளி நடை (ஸ்பேஸ்வாக்) – Spacewalk 2019
மார்ச்-29-2019 அன்று நடைபெற இருக்கும் அரிய விண்வெளி நிகழ்வைக் காணத்தவறாதீர்கள்! ஆம்! பன்னாட்டு விண்வெளி நிலைய வீரர்கள், இந்த வருடத்தில் இரண்டாவது முறையாக விண்வெளியில் நடக்க (Spacewalk) இருக்கிறார்கள்!
பன்னாட்டு விண்வெளி நிலையம் (International Space Station – ISS) உயிரியல், மருத்துவம், இயற்பியல், வானியல், வானிலை போன்ற பல அறிவியல் துறைகளில் ஆராய்ச்சி செய்யும் ஒரு சோதனைச் சாலை.
நிக் ஹேக் (Nick Hague) மற்றும் க்ரிஸ்டினா கோக் (Christina Koch) ஆகிய இரு விண்வெளி வீரர்களும், மார்ச்-29-2019, அமெரிக்க கிழக்குப் பகுதி நேரப்படி காலை 8.20 AM-க்கு (Eastern Time – EDT. அதாவது இந்திய நேரம் மாலை 05.50 PM) விண்வெளி நிலயத்துக்கு வெளியே சென்று, நிலையத்தின் மேம்பாட்டு மற்றும் பராமரிப்புப் பணிகளைச் செயவார்கள்!
குறிப்பாக, நிக் ஹேக் மற்றும் க்ரிஸ்டினா கோக் ஆகிய இருவரும் விண்வெளிக் கலத்தின் போர்ட்-4-ன் ட்ரஸ் ஸ்ட்ரக்சரில் உள்ள பழைய நிக்கல்-ஹைட்ரஜன் பேட்டெரிக்குப் பதில், புதிய லித்தியம்-அயன் பேட்டெரிகளைப் பொருத்துவார்கள். இதே போன்று போர்ட்-4-ன் ட்ரஸ் ஸ்ட்ரக்சரின் மறுபகுதியில் உள்ள பேட்டெரிகளை, நிக் ஹேக்-ம், ஆன் மெக்லைன் (AnneMcClain)-ம் சென்ற வாரம் மாற்றினார்கள்.
அமெரிக்காவின் நாஸா (NASA) நிறுவனம் இந்த அரிய நிகழ்வை, நேரடியாகப் படம் பிடித்து ஒளிபரப்புகிறது. இந்த ஒளிபரப்பு நாஸா தொலைக்காட்சி (NASA TV) யில் அமெரிக்க கிழக்கு நேரப்படி காலை 6.30 மணிக்கு (அதாவது இந்திய நேரப்படி மாலை 4.00 மணி) தொடங்கும்.
- https://www.youtube.com/watch?v=LQnZuZZh1pQ
- நாஸாவின் அதிகாரப்பூர்வ யூட்யூப் சானல் NASA’s offcial Youtube Channel
- NASA Live: Earth Views from the Space Station
Be the first to comment