பாப்பா அழாதே! – அழ. வள்ளியப்பா கவிதை – சிறுவர் பகுதி

பாப்பா அழாதே

பாப்பா அழாதே!குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா கவிதை

பாப்பா, பாப்பா, அழாதே!
பலூன் தாரேன்; அழாதே
!

கண்ணே பாப்பா, அழாதே!
காசு தாரேன்; அழாதே!

பொன்னே பாப்பா, அழாதே!
பொம்மை தாரேன்; அழாதே!

முத்துப் பாப்பா, அழாதே!
மிட்டாய் தாரேன்; அழாதே!என்ன வேண்டும்? சொல் பாப்பா.
எல்லாம் வேண்டுமோ? சொல் பாப்பா.

சரி சரி பாப்பா, தருகின்றேன்.
சிரி, சிரி, கொஞ்சம் சிரி, பாப்பா.Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.