கிழமை – பாரதிதாசன் கவிதை
ஞாயிறுதான் ஒன்று-பின்
நல்ல திங்கள் இரண்டு
வாயிற் செவ்வாய் மூன்று-பின்
வந்த புதன் நான்கு
தூய்வியாழன் ஐந்து-பின்
தோன்றும் வெள்ளி ஆறு
சாயும்சனி ஏழு– இதைத்
தவறாமற் கூறு.
ஞாயிறுதான் ஒன்று-பின்
நல்ல திங்கள் இரண்டு
வாயிற் செவ்வாய் மூன்று-பின்
வந்த புதன் நான்கு
தூய்வியாழன் ஐந்து-பின்
தோன்றும் வெள்ளி ஆறு
சாயும்சனி ஏழு– இதைத்
தவறாமற் கூறு.
வானவில் – தி. யாழினி – குழந்தைகள் படைத்த பாடல்கள் ஏழு வண்ண வானவில்அழகான வானவில்!மழையும் சூரியனும் சேர்ந்து வந்த வானவில்லேஎனக்குப் பிடித்த வானவில்லேஅழகான வானவில்லேசிவப்பும் நீலமும் கலந்து வந்த வானவில்லேஅழகான வானவில்லேகுட்டி பாப்பா தன்னுடன் விளையாட வந்த வானவில்லே! – வானவில் – தி. யாழினி – [ மேலும் படிக்க …]
அஞ்சுவது ஓரும் அறனே; ஒருவனை வஞ்சிப்பது ஓரும் அவா. – குறள்: 366 – அதிகாரம்: அவா அறுத்தல், பால்: அறம் விளக்கம்: ஒருவரை வஞ்சித்துக் கெடுப்பதற்குக் காரணமாக இருப்பது ஆசையேயாகும். எனவே, ஆசைக்கு அடிமையாகக் கூடாது என்ற அச்சத்துடன் வாழ வேண்டும்.
ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்சான்றோர் முகத்துக் களி. – குறள்: 923 – அதிகாரம்: கள் உண்ணாமை, பால்: பொருள் விளக்கம் கள்ளருந்தி மயங்கிடும் தன் மகனை, அவன் குற்றங்களை மன்னிக்கக் கூடிய தாயே காணச் சகிக்கமாட்டாள் என்கிறபோது ஏனைய சான்றோர்கள் அவனை எப்படிச் சகித்துக் கொள்வார்கள்.
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment