குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான ஓவியம் மற்றும் வடிவமைப்புகளுக்கான போட்டி – குருவிரொட்டி படைப்புத்திறன் போட்டி 2019 (Competition for Kids – Drawing and Creating Structures – Kuruvirotti Creativity Contest for Children 2019)

சிறுவர்க்கான படைப்புத்திறன் போட்டி 2019 - Creativity Contest for Children 2019

குருவிரொட்டி இணைய இதழ் நடத்தும் குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான ஓவியம் மற்றும் வடிவமைப்புகளுக்கான படைப்புத்திறன் போட்டி 2019 (Kuruvirotti Creativity Contest for Children 2019)

பிஞ்சுக் குழந்தைகளின் கற்பனை உலகம் எல்லையற்றது. உங்கள் குழந்தைகளின் படைப்புத்தன்மையை வெளியில்கொண்டு வரும் விதமாக, குருவிரொட்டி குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான ஓவியம் மற்றும் வடிவமைப்புகளுக்கான படைப்புத் திறன் போட்டி 2019-ஐ (Kuruvirotti Creativity Contest for Children 2019) நடத்துகிறது. உங்கள் உதவியின்றி, அவர்களை அவர்கள் போக்கிலேயே சிந்திக்கவிட்டு, தன்னிச்சையாக சில படைப்புகளை அவர்களது பிஞ்சுக்கரங்களால் உருவாக்கச் சொல்லுங்கள். உங்கள் குழந்தைகள் வரைந்த ஓவியங்கள் மற்றும் பிற படைப்புகளைப் படம் எடுத்து, அவர்களின் பெயர், குழந்தையின் புகைப்படம் (விருப்பம் இருப்பின்), வயது, படிக்கும் வகுப்பு, பள்ளியின் பெயர் (விருப்பம் இருப்பின்), ஊர், போன்ற விவரங்களுடன் எங்களுக்கு 30-நவம்பர்-2019-ஆம் தேதிக்குள் விண்ணப்பப் படிவத்தை நிரப்பியோ அல்லது மின்னஞ்சல் (இ-மெயில்) மூலமாகவோ அனுப்பி வையுங்கள். குருவிரொட்டி குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட படங்கள் டிசம்பர்-7-2019-ஆம் தேதியன்று குருவிரொட்டி இணைய இதழில் வெளியிடப்படும்.


ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும்

ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவுஇலா
ஊக்கம் உடையான் உழை.
குறள்: 594

– அதிகாரம்: ஊக்கம் உடைமை, பால்: பொருள்

விளக்கம்: உயர்வு, உறுதியான ஊக்கமுடையவர்களைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களிடம் போய்ச் சேரும்.


இப்போட்டியில் உங்கள் குழந்தைகள் பங்கேற்க கட்டணம் ஏதும் இல்லை. அவர்களுக்குள் இருக்கும் படைப்புத்திறனை அவர்களுக்கு உணர்த்தவும், அவர்களது படைப்புத்திறனை வெளிக்கொண்டு வரவும், அவர்கள் சாதனையாளார்கள் என்பதை வெளியுலகிற்கு எடுத்துக்காட்டவும் இது ஓர் அருமையான வாய்ப்பு!


குருவிரொட்டி குழந்தைகள் படைப்புத்திறன் போட்டி

போட்டிகள்

 1. ஓவியம் வரைதல் (Drawing)
 2. வடிவமைப்புகளை / கட்டமைப்புகளை உருவாக்குதல் (Creating Structures): காகிதம், அட்டை, அல்லது மற்ற பொருட்களால் செய்யப்பட வடிவங்கள், என எதை வேண்டுமானாலும் கொண்டு குழந்தைகள் வடிவமைப்புகளை உருவாக்கலாம். உங்கள் வீட்டிலேயே இருக்கும் எளிய தேவையற்ற பொருட்களைக் கொண்டும் படைப்புகளை உருவாக்காலாம்.

படைப்புகளுக்கான மையக்கருத்து

காடுகள், மலைகள், ஆறுகள், குளங்கள், ஏரிகள், கடல், சூரியன், விண்மீன்கள், வானம், மேகம், பூமி, வீடுகள், கட்டடங்கள், பாலங்கள், பொருட்கள், உணவு வகைகள், தாவரங்கள், பூக்கள், பறவைகள், விலங்குகள், நீர் வாழ் உயிரினங்கள், வாகனங்கள், அறிவியல், தொழில்நுட்பம் ஆகிய கருத்துகளில் சிலவற்றை மையமாக வைத்து, குழந்தைகளின் எண்ணங்களில் தோன்றும் படைப்புகளை உருவாக்க வேண்டும்.


பங்கேற்கத்தேவையான வயது வரம்பு மற்றும் விதிமுறைகள்

 1. வயது வரம்பு (Age Limit): இரண்டு (2) வயது முதல் பதின்மூன்று (13) வயது வரை அதாவது குழந்தைகள் முதல் எட்டாம் வகுப்பு படிக்கும் சிறுவர்கள் வரை.
 2. போட்டியாளர்கள் மூன்று குழுவினராகப் பிரிக்கப்படுவர்:
  • போட்டிக்குழு-1: இரண்டு முதல் ஐந்து வயது வரை
  • போட்டிக்குழு-2: ஆறு வயது முதல் பத்து வயது வரை
  • போட்டிக்குழு-3: பதினொன்று வயது முதல் பதின்மூன்று வயது வரை
 3. ஓவியங்கள் மற்றும் வடிவமைப்புகள் / கட்டமைப்புகள் மேற்கூறப்பட்ட மையக்கருத்துக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
 4. உங்கள் உதவியின்றி, குழந்தைகளை அவர்கள் போக்கிலேயே சிந்திக்கவிட்டு, தன்னிச்சையாக சில படைப்புகளை அவர்களது கைகளால் உருவாக்கச் சொல்லுங்கள்.
 5. ஒரு போட்டியாளர், அவர்கள் விருப்பத்திற்கேற்ப உருவாக்கிய ஒன்று அல்லது இரண்டு படைப்புகளின் படங்களை (வகைக்கு ஒரு படம் என அதிகபட்சமாக இரண்டு படைப்புகளுக்கான படங்கள்) எடுத்து அனுப்பலாம். அவற்றுள் ஒன்றை மட்டுமோ அல்லது இரண்டையுமோ தேர்ந்தெடுப்பது, குருவிரொட்டி குழு முடிவு செய்யும்.
 6. படைப்புகளின் புகைப்படங்கள்: படைப்புகளின் புகைப்படங்களின் அளவு 1MB (1000 x 1000 px பிக்செல்) அளவுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். குருவிரொட்டி தேவைக்கேற்ப அளவைக்குறைத்துக் கொள்ளும்.
 7. போட்டியாளரின் புகைப்படம்: போட்டியில் பங்கேற்கும் குழந்தைகளின் புகைப்படங்களில் அவர்கள் மட்டுமே இடம்பெற்றிருக்க வேண்டும். குழுப்படமாக இருக்கக் கூடாது. குழந்தைகளின் புகைப்படங்களின் அளவு 1MB (1000 x 1000 px பிக்செல்) அளவுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். குருவிரொட்டி தேவைக்கேற்ப அளவைக்குறைத்துக் கொள்ளும்.
 8. படங்கள் jpg, jpeg, png ஆகிய மூன்று வடிவங்களில் ஏதேனும் ஒரு வடிவத்தில் (format) இருக்கலாம்.
 9. தேதிகள் மற்றும் விதிமுறைகளை மாற்றியமைக்க குருவிரொட்டி குழுவுக்கு உரிமை உண்டு.
 10. போட்டியாளர் தேர்ந்தெடுக்கப்பட்டால் உங்கள் மின்னஞ்சல் முகவரி (இ-மெயில் – e-Mail id) தவிர, நீங்கள் அளிக்கும் போட்டியாளரின் மற்ற விவரங்கள் குருவிரொட்டி இணைய இதழில் வெளியிடப்படும்.

படைப்பு: தி. யாழினி, எல்கேஜிசிறந்த படைப்பாளிகளுக்கான மின்-சான்றிதழ் (E-Certificate)

மின்-சான்றிதழ்
 • தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த படங்கள் மட்டுமே குருவிரொட்டி இணைய இதழில் டிசம்பர் 2019 முதல் வாரத்தில் வெளியிடப்படும். படைப்புகளுடன், படைப்பாளிகளின் நிழற்படம், அவர்களுடைய வயது, படிப்பு, மற்றும் ஊர் போன்ற விவரங்களும் குருவிரொட்டி இணைய இதழில் வெளியிடப்படும்.
 • மேலும் சிறந்த படைப்பாளிகளுக்கு குருவிரொட்டி மின்-சான்றிதழ் (E-Certificate) வழங்கும்.
 • மின்-சான்றிதழ்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட போட்டியாளர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு (இ-மெயில் – e-Mail id) அனுப்பிவைக்கப்படும்.
 • சிறந்த படைப்புகளைத் தேர்ந்தெடுக்கும் உரிமை குருவிரொட்டி குழுவுக்கு மட்டுமே உண்டு.

படைப்புத்திறன் போட்டி

அனுப்பவேண்டிய விவரங்கள்

 • உங்கள் குழந்தை வரைந்த ஓவியங்கள் மற்றும் பிற படைப்புகளின் நிழற்படம்
 • குழந்தையின் பெயர்
 • குழந்தையின் புகைப்படம் (விருப்பம் இருப்பின்)
 • குழந்தையின் வயது
 • படிக்கும் வகுப்பு
 • பள்ளியின் பெயர் (விருப்பம் இருப்பின்)
 • ஊர்

போட்டி விவரங்களை அனுப்பும் முறை மற்றும் இறுதித் தேதிவிண்ணப்பங்களுக்கான இறுதித் தேதி 30-11-2019, நள்ளிரவுடன் (இந்திய நேரம்) முடிவடைந்தது!

குறிப்பு:

 • உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் எழுந்தால், கீழேயுள்ள கருத்துகள் (Comments) பகுதியில் உங்களது கேள்விகளைப் பதிவு செய்யலாம். அல்லது மேலே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு கேள்விகளை அனுப்பலாம்.
 • நீங்கள் அனுப்பும் மின்னஞ்சல்களுக்கு எங்களது பதில்கள் 24 முதல் 48 மணி நேரத்திற்குள் அனுப்பப்படும்.
 • ஒருவேளை எங்கள் பதில்கள் உங்களுடைய (இ-மெயிலின்) மின்னஞ்சல் பெட்டி (இன்பாக்ஸ் – Inbox Folder) காணப்படவில்லையெனில், உங்களுடைய இ-மெயிலின் ஸ்பேம் பெட்டியில் (Spam Folder) அல்லது இ-மெயிலின் ப்ரமோஷன்ஸ் (Promotions Folder) பகுதியில் அல்லது அப்டேட்ஸ் (Updates) பகுதியில் எங்களது மின்னஞ்சல் (இ-மெயில்) உள்ளதா எனப் பார்க்கவும்.

போட்டி முடிவுகள் வெளியாகும் தேதி மற்றும் விவரங்கள்

குருவிரொட்டி இணைய தளத்தில் சிறுவர் பகுதி பக்கத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள், போட்டியாளரகள் மற்றும் அவர்களது விவரங்கள் 07-டிசம்பர்-2019 அன்று வெளியிடப்படும். முடிவுகள் வெளியான செய்தி குருவிரொட்டியின் ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கங்களில் வெளியிடப்படும். மேலும் போட்டியாளர்களின் மின்னஞ்சல் (இ-மெயில்) முகவரிகளுக்கும் தகவல் அனுப்பப்படும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.