யாண்டுச்சென்று யாண்டும் உளர்ஆகார் – குறள்: 895

Thiruvalluvar

யாண்டுச்சென்று யாண்டும் உளர்ஆகார் வெந்துப்பின்
வேந்து செறப்பட் டவர்.
குறள்: 895

– அதிகாரம்: பெரியாரைப் பிழையாமை, பால்: பொருள்.கலைஞர் உரை

மிக்க வலிமை பொருந்திய அரசின் கோபத்திற்கு ஆளானவர்கள்
தப்பித்து எங்கே சென்றாலும் அங்கு அவர்களால் உயிர் வாழ
முடியாது.

.ஞா. தேவநேயப் பாவாணர் உரை

மிக்க வலிமை உடைய அரசனால் வெகுளப்பட்டவர், அவனிடமிருந்து தப்புவதற்காக எங்கே சென்றாலும் எங்கும் வாழ முடியாது.மு. வரதராசனார் உரை

ஆற்றல் உடையவர்க்கு ஆற்றல் இல்லாதவர் தீமை செய்தால், தானே வந்து அழிக்கவல்ல எமனைக் கைகாட்டி அழைத்தாற் போன்றது.G.U. Pope’s Translation

Who dare the fiery wrath of monarchs dread, Where’er they flee, are numbered with the dead.

Thirukkural: 895, Not Offending the Great, Wealth.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.