எரியான் சுடப்படினும் உய்வுஉண்டாம் – குறள்: 896

Thiruvalluvar

எரியான் சுடப்படினும் உய்வுஉண்டாம் உய்யார்
பெரியார்ப் பிழைத்துஒழுகு வார்
. குறள்: 896

– அதிகாரம்: பெரியாரைப் பிழையாமை, பால்: பொருள்.கலைஞர் உரை

நெருப்புச் சூழ்ந்து சுட்டாலும்கூட ஒருவர் பிழைத்துக் கொள்ள முடியும்;ஆனால் ஆற்றல் மிகுந்த பெரியோரிடம் தவறிழைப்போர் தப்பிப் பிழைப்பது முடியாது.

.ஞா. தேவநேயப் பாவாணர் உரை

ஒருவன் வீடு பற்றி வேகும்போது அல்லது விளக்குத் தன்மேல் பட்டபோது தீயாற் சுடப்பட்டானாயினும், எண்ணெயாலும் மருந்தாலும் ஒருகால் சாவினின்று தப்புதல் கூடும்; ஆயின், தவத்தாற் பெரியார்க்குத் தவறாக நடந்தவர் ஒருவகையாலும் தப்பார்.மு. வரதராசனார் உரை

தீயால் சுடப்பட்டாலும் ஒருகால் உயிர்பிழைத்து வாழ முடியும்; ஆற்றல் மிகுந்த பெரியாரிடத்தில் தவறு செய்து நடப்பவர் தப்பிப் பிழைக்க முடியாது.G.U. Pope’s Translation

Though in the conflagration caught, he may escape from thence:
He ‘scapes not who in life to great ones gives offence.

Thirukkural: 896, Not Offending the Great, Wealth.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.