தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் – குறள்: 1065

தெண்ணீர் அடுபுற்கை ஆயினும்

தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்தது
உண்ணலின் ஊங்குஇனியது இல். – குறள்: 1065

– அதிகாரம்: இரவு அச்சம், பால்: பொருள்கலைஞர் உரை

கூழ்தான் குடிக்கவேண்டிய நிலை என்றாலும் அதையும் தானே உழைத்துச் சம்பாதித்துக் குடித்தால் அதைவிட இனிமையானது வேறொன்றும் இல்லை.ஞா. தேவநேயப் பாவாணர் உரை

தெளிந்த நீர் போல் தெடுதெடுவென்றிருக்குமாறு சமைத்த கூழாயினும் ; தன் உழைப்பினால் வந்தவுணவை உண்ணுவதிலும் மிக இனியது ஒன்றுமில்லை,மு. வரதராசனார் உரை

தெளிந்த நீர்போல் சமைத்த கூழே ஆனாலும், முயற்சியால் கிடைத்ததை உண்பதைவிட இனிமையானது வேறொன்றும் இல்லை.G.U. Pope’s Translation

Nothing is sweeter than to taste the toil-won cheer,
Though mess of pottage as tastless as the water clear.

Thirukkural: 1065, The Dread of Mendicancy, Wealth

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.