வித்தும் இடல்வேண்டும் கொல்லோ – குறள்: 85

வித்தும் இடல்வேண்டும் கொல்லோ

வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்துஓம்பி
மிச்சில் மிசைவான் புலம்
. – குறள்: 85

– அதிகாரம்: விருந்து ஓம்பல், பால்: அறம்



கலைஞர் உரை

விருந்தினர்க்கு முதலில் உணவளித்து மிஞ்சியதை உண்டு வாழும்
பண்பாளன், தன் நிலத்திற்குரிய விதையைக்கூட விருந்தோம்பலுக்குப் பயன்படுத்தாமல் இருப்பானா?



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

முன்பு விருந்தினரை உண்பித்துவிட்டுப் பின்பு மீந்ததைத் தானுண்ணும் வேளாளனது நிலத்திற்கு; விதை தெளித்தலும் வேண்டுமோ? வேண்டியதில்லை.



மு. வரதராசனார் உரை

விருந்தினரை முன்னே போற்றி உணவளித்து மிஞ்சிய உணவை உண்டு வாழ்கின்றவனுடைய நிலத்தில் விதையும் விதைக்க வேண்டுமோ?



G.U. Pope’s Translation

Who first regales his guest, and then himself supplies, O’er all his fields, unsown, shall plenteous harvests rise.

 – Thirukkural: 85, Cherishing Guests, Virtues

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.