விருப்புஅறாச் சுற்றம் இயையின் – குறள்: 522

Thiruvalluvar

விருப்புஅறாச் சுற்றம் இயையின் அறுப்புஅறா
ஆக்கம் பலவும் தரும்.
– குறள்: 522

– அதிகாரம்: சுற்றம் தழால், பால்: பொருள்



கலைஞர் உரை

எந்த நிலைமையிலும் அன்பு குறையாத சுற்றம் ஒருவருக்குக்
கிடைத்தால் அது அவருக்கு ஆக்கமும், வளர்ச்சியும் அளிக்கக் கூடியதாக அமையும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

அன்பு நீங்காத உறவினம் ஒருவனுக்கு வாய்க்குமாயின் ; அது அவனுக்கு மேன்மேலுங் கிளரும் பல்வகைச் செல்வத்தை உண்டாக்கும்.



மு. வரதராசனார் உரை

அன்பு நீங்காத சுற்றம் ஒருவனுக்குக் கிடைத்தால், அது மேன்மேலும் வளர்ச்சி குறையாத ஆக்கம் பலவற்றையும் அவனுக்குக் கொடுக்கும்.



G.U. Pope’s Translation

The gift of kin’s unfailing love bestows
Much gain of good , like flower that fadeless blows.

 – Thirukkural: 522, Cherishing one’s kindred, Wealth



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.