வேண்டுதல் வேண்டாமை இலான்அடி – குறள்: 4

Thiruvalluvar

வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல
– குறள்: 4

– அதிகாரம்: கடவுள் வாழ்த்து, பால்: அறம்கலைஞர் உரை

விருப்பு வெறுப்பற்றுத் தன்னலமின்றித் திகழ்கின்றவரைப் பின்பற்றி நடப்பவர்களுக்கு எப்போதுமே துன்பம் ஏற்படுவதில்லை.ஞா. தேவநேயப் பாவாணர் உரை

விருப்பு வெறுப்பில்லாத இறைவனடியைச் சேர்ந்தவர்க்கு எங்கும் எக்காலத்தும் துன்பமில்லை.மு. வரதராசனார் உரை

விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை.G.U. Pope’s Translation

His foot, ‘Whom want affects not, irks not grief’, who gain
Shall not, through every time, of any woes complain.

 – Thirukkural: 4, The Praise of God, Virtues

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.