வசைஒழிய வாழ்வாரே வாழ்வார் – குறள்: 240

Thiruvalluvar

வசைஒழிய வாழ்வாரே வாழ்வார் இசைஒழிய
வாழ்வாரே வாழாதவர்.
– குறள்: 240

– அதிகாரம்:புகழ், பால்: அறம்



கலைஞர் உரை

பழி உண்டாகாமல் வாழ்வதே வாழ்க்கை எனப்படும். புகழ் இல்லாதவர் வாழ்வதும் வாழாததும் ஒன்றுதான்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

தமக்குப் பழிப்பில்லாமல் வாழ்பவரே உயிர் வாழ்பவராவர்; இசை ஒழிய புகழின்றி வாழ்பவரே உயிரோடிருந்தும் இறந்தவராவர்.



மு. வரதராசனார் உரை

தாம் வாழும் வாழ்க்கையில் பழி உண்டாகாமல் வாழ்கின்றவரே உயிர் வாழ்கின்றவர்; புகழ் உண்டாகாமல் வாழ்கின்றவரே உயிர் வாழாதவர்.



G.U. Pope’s Translation

Who live without reproach, them living men we deem;
Who live without renown, live not, though living men they seem.

 – Thirukkural: 240, Renown, Virtues



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.