உட்பகை அஞ்சித்தற் காக்க – குறள்: 883

Thiruvalluvar

உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவுஇடத்து
மட்பகையின் மாணத் தெறும்.
குறள்: 883

– அதிகாரம்: உட்பகை, பால்: பொருள்.



கலைஞர் உரை

உட்பகைக்கு அஞ்சி ஒருவன் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள
வேண்டும். இல்லாவிட்டால் ஒரு சோதனையான நேரத்தில் பச்சை
மண்பாண்டத்தை அறுக்கும் கருவிபோல அந்த உட்பகை அழிவு
செய்துவிடும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

உட்பகைவர்க்கு அஞ்சித் தன்னைக் காத்துக்கொள்க; ஏனெனின், அங்ஙனங் காவாவிடின், தனக்குத் தளர்ச்சி வந்த விடத்து, அவர் பகை குயவன் மட்கலத்தை யறுக்குங் கருவி அதனை யறுப்பதிலும் மிகுதியான அளவு தன்னைக் கெடுத்துவிடும்.



மு. வரதராசனார் உரை

உட்பகைக்கு அஞ்சி ஒருவன் தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும்; தளர்ச்சி வந்தபோது மட்கலத்தை அறுக்கும் கருவிபோல் அந்த உட்பகை தவறாமல் அழிவு செய்யும்.



G.U. Pope’s Translation

Of hidden hate beware, and guard thy life;
In troublous time ’twill deeper wound than potter’s knife.

Thirukkural: 883, Enmity Within, Wealth.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.