உதவி வரைத்தன்று உதவி – குறள்: 105

Thiruvalluvar

உதவி வரைத்தன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து.
– குறள்: 105

– அதிகாரம்: செய்ந்நன்றி அறிதல், பால்: அறம்



கலைஞர் உரை

உதவி என்பது, செய்யப்படும் அளவைப் பொறுத்துச்
சிறப்படைவதில்லை; அந்த உதவியைப் பெறுபவரின் பண்பைப் பொறுத்தே அதன் அளவு மதிப்பிடப்படும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

கைம்மாறான உதவி காரணத்தானும் பொருளானுங் காலத்தானுமாகிய மூவகையானும் முன் செய்த உதவியளவினதன்று ; அதனைச் செய்வித்துக் கொண்டவர்தம் அமைதியளவிற்று.



மு. வரதராசனார் உரை

கைம்மாறாகச் செய்யும் உதவி முன்செய்த உதவியின் அளவை உடையது அன்று; உதவி செய்யப்பட்டவரின் பண்புக்கு ஏற்ற அளவை உடையதாகும்.



G.U. Pope’s Translation

The kindly aid’s extent is of its worth no measure true; It’s worth is as the worth of him to whom the act you do.

 – Thirukkural: 105, The Knowledge of Benefits Conferred : Gratitude, Virtues

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.