அடக்கம் அமரருள் உய்க்கும் – குறள்: 121

அடக்கம் அமரருள் உய்க்கும்

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.
– குறள்: 121

– அதிகாரம்: அடக்கம் உடைமை, பால்: அறம்கலைஞர் உரை

அடக்கம் அழியாத புகழைக் கொடுக்கும; அடங்காமை வாழ்வையே இருளாக்கி விடும்.ஞா. தேவநேயப் பாவாணர் உரை

அடக்கமாகிய நன்று ஒருவனைத் தேவருலகத்திற் கொண்டுபோய்ச் சேர்க்கும்; அடங்காமையாகிய தீது ஒருவனைத் தங்குதற்கரிய இருளுலகத்திற்குச் செலுத்திவிடும்.மு. வரதராசனார் உரை

அடக்கம் ஒருவனை உயர்த்தித் தேவருள் சேர்க்கும்; அடக்கம் இல்லாதிருத்தல், பொல்லாத இருள் போன்ற தீய வாழ்க்கையில் செலுத்திவிடும்.G.U. Pope’s Translation

Control of self does man conduct to bliss the immortals share;
Indulgence leads to deepest night, and leaves him there.

– Thirukkural: 121, The Possession of Self-restraint, VirtuesBe the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.