நிலவரை நீள்புகழ் ஆற்றின் – குறள்: 234

Thiruvalluvar

நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தேள் உலகு.
– குறள்: 234

– அதிகாரம்: புகழ், பால்: அறம்



கலைஞர் உரை

இனிவரும் புதிய உலகம்கூட இன்றைய உலகில் தன்னலம் துறந்து புகழ் ஈட்டிய பெருமக்களை விடுத்து, அறிவாற்றல் உடையவரை மட்டும் போற்றிக் கொண்டிராது.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

ஒருவன் ஈகையால் நிலவுலகத்தின்கண் நிலையான புகழைச் செய்வானாயின், தேவருலகம் அவனையன்றி அறிவால் மட்டுஞ் சிறந்தவரை விரும்பாது.



மு. வரதராசனார் உரை

நிலவுலகின் எல்லையில் நெடுங்காலம் நிற்கவல்ல புகழைச் செய்தால், வானுலகம் (அவ்வாறு புகழ் செய்தாரைப் போற்றுமே அல்லாமல்) தேவரைப் போற்றாது.



G.U. Pope’s Translation

If men do virtuous deeds by world-wide ample glory crowned,
The heavens will cease to laud the sage for other gifts renowned.

 – Thirukkural: 234, Renown, Virtues



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.