நன்மையும் தீமையும் நாடி – குறள்: 511

நன்மையும் தீமையும் நாடி

நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
தன்மையான் ஆளப் படும்.
– குறள்: 511

– அதிகாரம்: தெரிந்து வினையாடல், பால்: பொருள்



கலைஞர் உரை

நன்மை எது தீமை எது என ஆராய்ந்து அறிந்து, நற்செயலில் மட்டுமே நாட்டம் கொண்டவர்கள் எப்பணியினை ஆற்றிடவும் தகுதி பெற்றவராவார்கள்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

அரசன் முதற்கண் தனக்கிட்ட பணியில் அரசனுக்கு நல்லனவும் தீயனவு மானவற்றை ஆராய்ந்து, அவற்றுள் நல்லனவற்றையே விரும்பிய இயல்பையுடையான்; பின் அரசனால் உண்மையானவன் என்று அறியப்பட்டுச் சிறந்தவினைகளில் ஆளப்படுவான்.



மு. வரதராசனார் உரை

நன்மையும் தீமையுமாகிய இரண்டையும் ஆராய்ந்து நன்மை தருகின்றவற்றையே விரும்புகின்ற இயல்புடையவன் (செயலுக்கு உரியவனாக) ஆளப்படுவான்.



G.U. Pope’s Translation

Who good and evil scanning, ever makes the good his joy;
Such man of virtuous mood should king employ.

 – Thirukkural: 511, Selection and Employment, Wealth



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.