உண்ணாமை உள்ளது உயிர்நிலை – குறள்: 255

Thiruvalluvar

உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊன்உண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு.

– குறள்: 255

– அதிகாரம்: புலால் மறுத்தல், பால்: அறம்



கலைஞர் உரை

உயிர்களை உணவாக்கிக் கொள்ளச் சகதிக்குழியும் வாய் திறவாது; புலால் உண்ணாதவர்கள் இருப்பதால், பல உயிர்கள் கொல்லப்படாமல் வாழ்கின்றன.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

ஒருசார் உயிர்கள் உடம்பொடு கூடி நிற்றல் ஊனுண்ணாமையாகிய அறத்தால் நேர்வது; ஆதலால், ஒருவன் ஊனுண்பானாயின், அவனை விழுங்கிய நரகம் பின்பு அவனை வெளிப்படுத்தற்கு வாய் திறவாது.



மு. வரதராசனார் உரை

உயிர்கள் உடம்புபெற்று வாழும் நிலைமை, ஊன் உண்ணாதிருத்தலை அடிப்படையாகக் கொண்டது; ஊன் உண்டால் நரகம் அவனை வெளிவிடாது.



G.U. Pope’s Translation

If flesh you eat not, life’s abodes unharmed remain; Who eats, hell swallows him,and renders not again.

 – Thirukkural: 255, The Renunciation of Flesh, Virtues



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.