எல்லா விளக்கும் விளக்கல்ல – குறள்: 299

எல்லா விளக்கும் விளக்கல்ல


எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு.
– குறள்: 299

– அதிகாரம்: வாய்மை, பால்: அறம்



கலைஞர் உரை

புறத்தின் இருளைப் போக்கும் விளக்குகளைவிட அகத்தின் இருளைப் போக்கும் பொய்யாமை எனும் விளக்கே ஒருவனை உயர்ந்தோன் எனக் காட்டும் ஒளிமிக்க விளக்காகும்.



ஞா. தேவநேயப் பாவாணர்

துறவோர்க்குப் புறவிருள் போக்கும் விளக்குகளெல்லாம் விளக்காகா; அகவிருள் போக்கும் பொய்யாமையாகிய விளக்கே விளக்காம்.



மு.வரதராசனார் உரை

(புறத்தில் உள்ள இருளை நீக்கும்) விளக்குகள் எல்லாம் விளக்குகள் அல்ல; சான்றோர்க்கு (அகத்து இருள் நீக்கும்) பொய்யாமையாகிய விளக்கே விளக்கு ஆகும்.



G.U. Pope’s Translation

Every lamp is not a lamp in wise men’s sight;
That’s the lamp with truth’s pure radiance bright.

– Thirukkural: 299, Veracity, Virtues



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.