பெரும்பொருளான் பெட்டக்கது ஆகி – குறள்: 732

Thiruvalluvar

பெரும்பொருளான் பெட்டக்கது ஆகி அருங்கேட்டால்
ஆற்ற விளைவது நாடு.
– குறள்: 732

– அதிகாரம்: நாடு, பால்: பொருள்கலைஞர் உரை

பொருள் வளம் நிறைந்ததாகவும், பிறர் போற்றத் தக்கதாகவும்,
கேடற்றதாகவும், நல்ல விளைச்சல் கொண்டதாகவும் அமைவதே சிறந்த நாடாகும்.ஞா. தேவநேயப் பாவாணர் உரை

பல்வகைப் பொருள் வளமிகுதியாற் பிற நாட்டாராலும் விரும்பப்படுவதாய்; கேடில்லாமையோடுகூடி; நானிலச்செல்வமும் மிகுதியாக விளைவதே வறுமை யில்லாத நாடாவது.மு. வரதராசனார் உரை

மிக்க பொருள்வளம் உடையதாய், எல்லாரும் விரும்பத்தக்கதாய், கேடு இல்லாததாய், மிகுதியாக விளைபொருள் தருவதே நாடாகும்.G.U. Pope’s Translation

That is a ‘land’ which men desire for wealth’s abundant share,
Yielding rich increase, where calamities are rare.

 – Thirukkural: 732, The Land, WealthBe the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.