உடைத்தம் வலிஅறியார் ஊக்கத்தின் ஊக்கி – குறள்: 473

Thiruvalluvar

உடைத்தம் வலிஅறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர். – குறள்: 473

அதிகாரம்: வலி அறிதல், பால்: பொருள்கலைஞர் உரை

தம்முடைய வலிமையின் அளவை அறியாமல் உணர்ச்சி வயப்பட்டு ஒரு செயலைத் தொடங்கி இடையில் கெட்டுப் போனவர்கள் பலர் உண்டு.ஞா. தேவநேயப் பாவாணர் உரை

தம்முடைய உண்மையான வலியளவைச் சரியாக அளந்தறியாது , தம் மனவெழுச்சி மிகையால் தம்மினும் வலியாரொடு போர்செய்ய முயன்று ; அவர் தாக்குதலைப்பொறுக்கும் ஆற்றலின்றி இடையே கெட்டுப்போன அரசர் உலகத்திற்பலராவர் .மு. வரதராசனார் உரை

தம்முடைய வலிமை இவ்வளவு என்று அறியாமல் ஊக்கத்தால் முனைந்து தொடங்கி இடையில் அதை முடிக்க வகையில்லாமல் அழிந்தவர் பலர்.G.U. Pope’s Translation

I’ll – deeming of their proper powers, have many monarchs striven, And midmost of unequal conflict fallen asunder riven.

 – Thirukkural: 473,The Knowledge of Power, WealthBe the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.