பொய்யோ? மெய்யோ? – நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே – பாரதியார் கவிதை

நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே

பொய்யோ? மெய்யோ? – நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே … பாரதியார் கவிதை

நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே,
  நீங்களெல்லாம்
சொற்பனந்தானா? — பல
  தோற்ற மயக்கங்களோ?
கற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே,
  நீங்களெல்லாம்
அற்ப மாயைகளோ? — உம்முள்
  ஆழ்ந்த பொருளில்லையோ?


வானகமே, இளவெயிலே, மரச்செறிவே,
  நீங்களெல்லாம்
கானலின் நீரோ? — வெறுங்
  காட்சிப் பிழைதானோ?
போனதெல்லாம் கனவினைப்போற்
  புதைந்தழிந்தே போனதனால்
நானுமோர் கனவோ? — இந்த
  ஞாலமும் பொய்தானோ?


Road to nowhere

காலமென்றே ஒருநினைவும்
  காட்சியென்றே பலநினைவும்
கோலமும் பொய்களோ? — அங்குக்
  குணங்களும் பொய்களோ?
சோலையிலே மரங்களெல்லாம்
  தோன்றுவதோர் விதையிலென்றால்
சோலை பொய்யாமோ? — இதைச்
  சொல்லொடு சேர்ப்பாரோ?


காண்பவெல்லாம் மறையுமென்றால்
மறைந்த தெல்லாம் காண்பமன்றோ?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.