ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் – குறள்: 190

Thiruvalluvar

ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கிற்பின்
தீதுஉண்டோ மன்னும் உயிர்க்கு.
– குறள்: 190

– அதிகாரம்: புறம் கூறாமை, பால்: அறம்கலைஞர் உரை

பிறர் குற்றத்தைக் காண்பவர்கள் தமது குற்றத்தையும் எண்ணிப் பார்ப்பார்களேயானால் புறங்கூறும் பழக்கமும் போகும்; வாழ்க்கையும் நிம்மதியாக அமையும்.ஞா. தேவநேயப் பாவாணர் உரை

புறங்கூறுவார் தாம் காணும் பிறர் குற்றம்போல் தம்குற்றத்தையுங் காணவல்லராயின்; நிலைபெற்ற மக்களுயிர்க்கு வரக்கூடிய துன்பமுண்டோ ?மு. வரதராசனார் உரை

அயலாருடைய குற்றத்தைக் காண்பதுபோல் தம் குற்றத்தையும் காணவல்லவரானால், நிலைபெற்ற உயிர் வாழ்க்கைக்குத் துன்பம் உண்டோ?G.U. Pope’s Translation

If each his own, as neighbours’ faults would scan, Could any evil hap to living man?

 – Thirukkural: 190, Not Backbiting, Virtues

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.