Thiruvalluvar
திருக்குறள்

கரவாது உவந்துஈயும் கண்அன்னார் – குறள்: 1061

கரவாது உவந்துஈயும் கண்அன்னார் கண்ணும்இரவாமை கோடி உறும். – குறள்: 1061 – அதிகாரம்: இரவு அச்சம், பால்: பொருள் கலைஞர் உரை இருப்பதை ஒளிக்காமல் வழங்கிடும் இரக்கச் சிந்தையுடையவரிடம் கூட, இரவாமல் இருப்பது கோடி மடங்கு உயர்வுடையதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தம்மிட முள்ளதை ஒளிக்காது, [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் – குறள்: 1062

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்துகெடுக உலகு இயற்றியான். – குறள்: 1062 – அதிகாரம்: இரவு அச்சம், பால்: பொருள் கலைஞர் உரை பிச்சையெடுத்துதான் சிலர் உயிர்வாழ வேண்டும் என்ற நிலையிருந்தால்இந்த உலகத்தைப் படைத்தவனாகச் சொல்லப்படுபவனும் கெட்டொழிந்து திரியட்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை இவ்வுலகத்தைப் படைத்த இறைவன் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

இன்மை இடும்பை இரந்துதீர் – குறள்: 1063

இன்மை இடும்பை இரந்துதீர் வாம்என்னும்வன்மையின் வன்பாட்டது இல். – குறள்: 1063 – அதிகாரம்: இரவு அச்சம், பால்: பொருள் கலைஞர் உரை வறுமைக்கொடுமையைப் பிறரிடம் இரந்து போக்கிக் கொள்ளலாம்என்று கருதும் கொடுமையைப்போல் வேறொரு கொடுமை இல்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை வறுமைத் துன்பத்தை உழைப்பால் நீக்குவோமென்று [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

இடம்எல்லாம் கொள்ளாத் தகைத்தே – குறள்: 1064

இடம்எல்லாம் கொள்ளாத் தகைத்தே இடம்இல்லாக்காலும் இரவுஒல்லாச் சால்பு. – குறள்: 1064 – அதிகாரம்: இரவு அச்சம், பால்: பொருள் கலைஞர் உரை வாழ்வதற்கு ஒரு வழியும் கிடைக்காத நிலையிலும் பிறரிடம் கையேந்திட நினைக்காத பண்புக்கு, இந்த வையகமே ஈடாகாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒரு சிறிதும் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

ஆவிற்கு நீர்என்று இரப்பினும் – குறள்: 1066

ஆவிற்கு நீர்என்று இரப்பினும் நாவிற்குஇரவின் இளிவந்தது இல். – குறள்: 1066 – அதிகாரம்: இரவு அச்சம், பால்: பொருள் கலைஞர் உரை தாகம் கொண்டு தவிக்கும் ஒரு பசுவுக்காகத் தண்ணீர் வேண்டுமென இரந்து கேட்டாலும்கூட, அப்படிக்கேட்கும் நாவுக்கு, அதைவிட இழிவானது வேறொன்றுமில்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

இரவுஎன்னும் ஏமாப்புஇல் தோணி – குறள்: 1068

இரவுஎன்னும் ஏமாப்புஇல் தோணி கரவுஎன்னும்பார்தாக்க பக்கு விடும். – குறள்: 1068 – அதிகாரம்: இரவு அச்சம், பால்: பொருள் கலைஞர் உரை இருப்பதை மறைத்து இல்லையென்று கூறும் கல் நெஞ்சின் மீது,இரத்தல் எனப்படும் பாதுகாப்பற்ற தோணி மோதினால் பிளந்துநொறுங்கிவிடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை வறுமை யென்னுங் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

இரவுஉள்ள உள்ளம் உருகும் – குறள்: 1069

இரவுஉள்ள உள்ளம் உருகும் கரவுஉள்ளஉள்ளதூஉம் இன்றிக் கெடும். – குறள்: 1069 – அதிகாரம்: இரவு அச்சம், பால்: பொருள் கலைஞர் உரை இரந்து வாழ்வோர் நிலையை நினைக்கும் போது உள்ளம் உருகுகிறது, இருப்பதைக் கொடுக்க மனமின்றி மறைத்து வாழ்பவரை நினைத்தால் உருகிடவும் வழியின்றி உள்ளமே ஒழிந்து விடுகிறது. [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

கரப்பவர்க்கு யாங்குஒளிக்கும் கொல்லோ – குறள்: 1070

கரப்பவர்க்கு யாங்குஒளிக்கும் கொல்லோ இரப்பவர்சொல்லாடப் போஒம் உயிர். – குறள்: 1070 – அதிகாரம்: இரவு அச்சம், பால்: பொருள் கலைஞர் உரை இருப்பதை ஒளித்துக்கொண்டு ‘இல்லை’ என்பவர்களின் சொல்லைக் கேட்டவுடன், இரப்போரின் உயிரே போய் விடுகிறதே; அப்படிச் சொல்பவர்களின் உயிர் மட்டும் எங்கே ஒளிந்துகொண்டு இருக்குமோ? ஞா. [ மேலும் படிக்க …]

இரப்பன் இரப்பாரை எல்லாம்
திருக்குறள்

இரப்பன் இரப்பாரை எல்லாம் – குறள்: 1067

இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின்கரப்பார் இரவன்மின் என்று. – குறள்: 1067 – அதிகாரம்: இரவு அச்சம், பால்: பொருள் கலைஞர் உரை கையில் உள்ளதை மறைத்து ‘இல்லை’ என்போரிடம் கையேந்தவேண்டாமென்று கையேந்துபவர்களை யெல்லாம் கையேந்திக் கேட்டுக் கொள்கிறேன். . ஞா. தேவநேயப் பாவாணர் உரை இன்றியமையாமை பற்றி [ மேலும் படிக்க …]

தெண்ணீர் அடுபுற்கை ஆயினும்
திருக்குறள்

தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் – குறள்: 1065

தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்ததுஉண்ணலின் ஊங்குஇனியது இல். – குறள்: 1065 – அதிகாரம்: இரவு அச்சம், பால்: பொருள் கலைஞர் உரை கூழ்தான் குடிக்கவேண்டிய நிலை என்றாலும் அதையும் தானே உழைத்துச் சம்பாதித்துக் குடித்தால் அதைவிட இனிமையானது வேறொன்றும் இல்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை தெளிந்த [ மேலும் படிக்க …]