தன்துணை இன்றால் பகைஇரண்டால் – குறள்: 875

Thiruvalluvar

தன்துணை இன்றால் பகைஇரண்டால் தான்ஒருவன்
இன்துணையாக் கொள்கஅவற்றின் ஒன்று.
குறள்: 875

– அதிகாரம்: பகைத்திறம் தெரிதல், பால்: பொருள்.கலைஞர் உரை

தனது பகைவர்கள் இரு பிரிவினராக இயங்கும் நிலையில் தனக்குத்
துணையாக யாருமின்றித் தனியாக இருப்பவர், அந்தப் பகைவர்களில் ஒருவரைத் துணையாகக் கொள்ள வேண்டும்.ஞா. தேவநேயப் பாவாணர் உரை

தனக்குதவுந் துணையொன்று மில்லாமலும் தன்னைக் கெடுக்கக் கூடிய பகை இரண்டுடையனவாகவும் தான் தனியனாகவும் இருப்பவன் ; அப்பகை யிரண்டனுள் தனக்கிசைந்த தொன்றை அப்பொழுதைக்கேனும் நிலையாக வேனும் நல்ல துணையாக அமைத்துக்கொள்க.மு. வரதராசனார் உரை

தனக்கு உதவியான துணையோ இல்லை; தனக்குப் பகையோ இரண்டு; தானோ ஒருவன்; இந்நிலையில் அப்பகைகளுள் ஒன்றை இனிய துணையாகக் கொள்ள வேண்டும்G.U. Pope’s Translation

Without ally, who flights with twofold enemy o’ermatched,
Must render one of these a friend attached.

Thirukkural: 875, Knowing the Quality of Hate, Wealth.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.