பகைஎன்னும் பண்பு இலதனை – குறள்: 871

Thiruvalluvar

பகைஎன்னும் பண்பு இலதனை ஒருவன்
நகையேயும் வேண்டற்பாற்று அன்று.
குறள்: 871

– அதிகாரம்: பகைத்திறம் தெரிதல், பால்: பொருள்.கலைஞர் உரை

பகை உணர்வு என்பது பண்புக்கு மாறுபாடானது என்பதால் அதனை வேடிக்கை விளையாட்டாகக்கூட ஒருவன் கொள்ளக் கூடாது.ஞா. தேவநேயப் பாவாணர் உரை

பகையென்று சொல்லப்படும் தீயகுணத்தை; ஒருவன் விளையாட்டிற்கேனும் விரும்பத்தக்கதாக அரசியல் நூலாற் கொள்ளப்படுவதன்று.மு. வரதராசனார் உரை

பகை என்று சொல்லப்படும் பண்பு இல்லாத தீமையை ஒருவன் சிரித்துப் பொழுதுபோக்கும் விளையாட்டாகவும் விரும்புதலாகாது.G.U. Pope’s Translation

For Hate, that ill-conditioned thing, not e’en in jest, Let any evil longing rule your breast.

Thirukkural: 871, Knowing the Quality of Hate, Wealth.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.