தள்ளா விளையுளும் தக்காரும் – குறள்: 731

Thiruvalluvar

தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்வுஇலாச்
செல்வரும் சேர்வது நாடு.
– குறள்: 731

– அதிகாரம்: நாடு, பால்: பொருள்



கலைஞர் உரை

செழிப்புக் குறையாத விளைபொருள்களும், சிறந்த பெருமக்களும்,
செல்வத்தைத் தீயவழியில் செலவிடாதவர்களும் அமையப்பெற்றதே நல்ல நாடாகும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

குறையாத விளைபொருளும்; தகுதியுள்ள பெரியோரும்; கேடில்லாத செல்வமுடையோரும்; முன்கூறப்பட்ட செங்கோலரசனோடும் சிறந்த அமைச்சனோடும் பொருந்தியிருப்பதே நல்ல நாடாவது.



மு. வரதராசனார் உரை

குறையாத விளைபொருளும், தக்க அறிஞரும், கேடில்லாத செல்வம் உடையவரும் கூடிப் பொருந்தியுள்ள நாடே நாடாகும்.



G.U. Pope’s Translation

where spreads fertility unfailing, where resides a band, Of virtuous men, and those of ample wealth, call that a ‘land’.

 – Thirukkural: 731, The Land, Wealth



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.