பிறன்பழி கூறுவான் தன்பழி – குறள்: 186

Thiruvalluvar

பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்
திறன்தெரிந்து கூறப் படும். – குறள்: 186

– அதிகாரம்: புறம் கூறாமை, பால்: அறம்



கலைஞர் உரை

பிறர்மீது ஒருவன் புறங்கூறித் திரிகிறான் என்றால் அவனது பழிச்
செயல்களை ஆராய்ந்து அவற்றில் கொடுமையானவைகளை அவன் மீது கூற நேரிடும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

பிறனொருவன் பழியை அவன் புறத்துக் கூறுபவன்; தன் சொந்தப் பழிகளுள்ளும் கடுமையானவை தெரிந்தெடுக்கப்பட்டு அப்பிறனால் தன் எதிரிலேயே கூறப்படுவான்.



மு. வரதராசனார் உரை

மற்றவனைப்பற்றிப் புறங்கூறுகின்றவன், அவனுடைய பழிகள் பலவற்றிலும் நோகத்தக்கவை ஆராய்ந்து கூறிப் பிறரால் பழிக்கப்படுவான்.



G.U. Pope’s Translation

Who on his neighbours’ sins delights to dwell,
The story of his sins, culled out with care,the world will tell.

 – Thirukkural: 186, Not Backbiting, Virtues

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.