அறிவினுள் எல்லாம் தலைஎன்ப – குறள்: 203

Thiruvalluvar

அறிவினுள் எல்லாம் தலைஎன்ப தீய
செறுவார்க்கும் செய்யா விடல்.

– குறள்: 203

– அதிகாரம்: தீவினை அச்சம், பால்: அறம்கலைஞர் உரை

தீமை செய்தவர்க்கு அதையே திருப்பிச் செய்யாமலிருத்தலை, எல்லா அறிவிலும் முதன்மையான அறிவு என்று போற்றுவர்.ஞா. தேவநேயப் பாவாணர் உரை

தம்மைப் பகைப்பவர்க்குந் தீமையானவற்றைச் செய்யாது விடுதலை; அறிவுச் செயல்களெல்லாவற்றுள்ளும் தலையாயதென்பர் அறிவுடையோர்.மு. வரதராசனார் உரை

தம்மை வருத்துவோர்க்கும் தீய செயல்களைச் செய்யாமலிருத்தலை, அறிவு எல்லாவற்றிலும் தலையான அறிவு என்று கூறுவர்.G.U. Pope’s Translation

Even to those that hate make no return of ill;
So shalt thou wisdom’s highest law. ‘Tis said, fulfil.

 – Thirukkural: 203, Dread of Evil Deed, VirtuesBe the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.