விழைதகையான் வேண்டி யிருப்பர் – குறள்: 804

Thiruvalluvar

விழைதகையான் வேண்டி யிருப்பர் கெழுதகையான்
கேளாது நட்டார் செயின்.
– குறள்: 804

– அதிகாரம்: பழைமை, பால்: பொருள்



கலைஞர் உரை

பழகிய நட்பின் உரிமை காரணமாகத் தமது நண்பர் தம்மைக்
கேளாமலே ஒரு செயல் புரிந்து விட்டாலும்கூட நல்ல நண்பராயிருப்பவர் அதனை ஏற்றுக் கொள்ளவே செய்வார்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

பழைமையான நண்பர் தம்மைக் கேட்டுச் செய்ய வேண்டிய ஒரு வினையைத் தம் உரிமையாற் கேளாது செய்தாராயின்,அறிவுடையார் அதன் விரும்பப்படுந் தன்மை பற்றி அவரைத் தமக்கு வேண்டியவராகக் கொள்வார்.



மு. வரதராசனார் உரை

உரிமையால் கேளாமலே நண்பர் ஒன்றைச் செய்தால், அந்த உரிமையைப் போற்றி விரும்பும் தன்மையோடு அச்செயலையும் விரும்பி உடன்பட்டிருப்பர் அறிஞர்.



G.U. Pope’s Translation

When friends unbidden do familiar acts with loving heart,
Friends take the kindly deed in friendly part.

Thirukkural: 804, Familiarity, Wealth

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.